tamilnadu

img

எளிய மக்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க இடதுசாரிகளை தேர்ந்தெடுப்பீர்! புதுச்சேரி வாக்காளர்களுக்கு திரைக்கலைஞர் ரோகிணி வேண்டுகோள்

எளிய மக்களின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க இடதுசாரிகளை தேர்ந்தெடுப்பீர்! புதுச்சேரி வாக்காளர்களுக்கு திரைக்கலைஞர் ரோகிணி வேண்டுகோள்

புதுச்சேரி,ஏப்,5- எளிய மக்களின் குரல் சட்டப் பேரவையில் ஒலிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று திரைக் கலைஞர் ரோகிணி வாக்காளர் களுக்கு அழைப்பு விடுத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி யில் உழவர்கரை கமிட்டி செயலா ளர் ராம்ஜி தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் ராஜாங்கத்தை ஆதரித்து திரைக்கலைஞர் ரோகிணி சனிக்கிழமை அய்யனார் கோவில் எதிரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வேலை வாய்ப்புகளை உருவாக் கவும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். மூடிய பஞ்சாலைகள் அனைத்தையும் திறக்க வேண்டும் என்றார். புதுச்சேரியை வெளியே இருந்து பார்ப்பவர்கள் இங்கு நிறைய மதுக் கடைகள் இருக்கிறது. வார இறுதி நாட்களில் பொழுது போக்குக்கு வந்து  செல்லலாம் என்று நினைக்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து முன்னேற வேண்டும் என்று துடிக்கும் மக்கள் தான் நிறையபேர் இங்குள்ளனர்.  அந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்றால் ரெஸ்டோ பார்கள் இல்லாமல், ஐடி பார்க்கை உருவாக்கி தர வேண்டும். ரெஸ்டோ பார்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 2019ல் 100 கடைகள் தற்போது 600 கடைகள்! புதுச்சேரியில் 2019-ல் 100  மதுக்கடைகள் இருந்தது. அது இப்போது 600 ஆக மாறியுள்ளது. இதன் மூலம் ஏற்படும் பாதிப்பை அறவே தடுக்க வேண்டும். அதற்கு  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான விஷயங்களை வலியு றுத்துவதற்கு சட்டப்பேரவையில் நமது எம்எல்ஏ இருக்க வேண்டும்.   சட்டப்பேரவையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்  இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்ச னைகளை வலுவாக எடுத்துரைக்க முடியும். ஏனென்றால் மக்களின் பிரச்ச னைக்காக குரல் எழுப்பக்கூடிய வர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான். மக்களின் முன்னேற்றத்துக்கு மதுக் கடைகள் தேவையில்லை. கல்வி கூடங்கள், மருத்துவ மனைகள், வேலை வாய்ப்புக்கான கூடங்கள் தேவையாக இருக்கிறது.  மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில் சென்று போராடு வது கம்யூனிஸ்ட் தான். எளிய மக்க ளின் சார்பில் இருப்பவர்கள் அவர்கள் தான் என்பதை புரிந்து கொண்டு மத சார்பற்ற ஒரு இடம் நமக்கு வேண்டும்  என்றால் நமது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாங்கத்துக்கு வாக்க ளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ரோகிணி கேட்டுக்கொண்டார். முன்னதாக லாஸ்பேட்டை அய்ய னார் கோவில் எதிரில் துவங்கி உழவர் சந்தை, அசோக் நகர்,குமரன் நகர், குறிஞ்சி நகர் ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக  சென்று திரைக்கலைஞர் ரோகிணி வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், கொளஞ்சியப்பன், சத்தியா, கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பி னர்கள் ராமசாமி, ரமேஷ், ஜோதி பாசு, ஆனந்த், சஞ்சய், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அரிகிருஷ் ணன், நிலவழகன் சுரேஷ், மணி மாறன் உட்பட பலர் பங்கேற்றனர். திருபுவனை புதுச்சேரி திருபுவனை தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தட்சிணாமூர்த்திக்கு  ரோகிணி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தொகுதிக்குட்பட்ட செல்லி ப்பட்டியிலிருந்து துவங்கிய என் பிரச்சாரம் சோரப்பட்டு, வம்புபட்டு, வாதானுர், மதகடிப்பட்டு, ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வாக னத்தில் சென்று  வாக்கு சேகரித்தார்.  உழவர்கரை தொகுதியில் போட்டி யிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் நாரா.கலைநாத னுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் கோரி  தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் பாளையம் ஆகிய பகுதி களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.