states

img

சட்டமன்றத்தில் விலைவாசி கட்டுப்பாடு, இலவச உணவுப் பொருட்களுக்கு ஆதரவாக போராடுவோம்

சட்டமன்றத்தில் விலைவாசி கட்டுப்பாடு, இலவச உணவுப் பொருட்களுக்கு ஆதரவாக போராடுவோம்

கவுகாத்தி 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப். 9 அன்று சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் அசாம் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியில் (பவானிப்பூர், கோரேஸ்வர்) போட்டியிடுகிறது. இந்நிலையில், “வாக்குறுதி அல்ல, இது எங்கள் கடமை” என்ற முழக்கத்துடன் பவா னிப்பூர் (மனோரஞ்சன் தாலுக்தார்), கோரேஸ் வர் (பாபுராம் போரா) தொகுதி வேட்பாளர்களு க்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை களோடு சிபிஎம் சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுர இயக்கத்தை தொடங்கியுள்ளது.  அந்த துண்டுப் பிரசுரத்தில்,“சிபிஎம் வேட்பா ளர்களுக்கு வாக்களித்தால் உணவுப் பொ ருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொது விநியோக முறையை வலுப்படுத்தவும் நட வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சட்டமன்றத் தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும் பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்க ளை விலையில்லாமல் இலவசமாக வழங்கப் போராடுவோம். அதே போல குறைந்த வருமா னம் கொண்ட குடும்பங்களுக்கு மானிய விலை யில் அரிசி, கோதுமை, பருப்பு, உப்பு, சர்க்கரை,  சமையல் எண்ணெய் மற்றும் சோப்பு போன்ற பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக் கப்படும். சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெற்றால், சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் நலனுக்காக சமரசமின்றி போராடு வோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.