இனி ‘கேரளா’ அல்ல ‘கேரளம்’ மாநிலப் பெயர் மாற்றத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக பினராயி விஜயன் உள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள சட்டமன்றத்தில் மாநி லத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் பினராயி விஜயன்,“அரசியலமைப்பின் எட்டா வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதற்குப் பதிலாக ‘கேர ளம்’ என மாற்ற வேண்டும்” என ஒன்றிய அரசை வலியுறுத்தியிருந்தார். கேரளாவில் வரும் ஏப்ரல்-மே மாதங்க ளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர வை செவ்வாயன்று பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முக்கிய முடிவை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். மலையாள மொழியில் இந்த மாநிலம் ‘கேரளம்’ என்றே அழைக்கப்படுகிறது. தற்போது ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம், அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ‘கேரளம்’ என்ற பெயரே இனி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
