இலங்கைத் தமிழர் முகாமில் 90 புதிய வீடுகள் முதலமைச்சர் முன்னிலையில் முகாம்வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது
நாகர்கோவில், பிப்.24- கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளுடன் 7 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் பிப்ரவரி 24 அன்று முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப் பட்டது. பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 100 வீடுகள் கடந்த 17.2.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும், பழவிளையில் 4 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 72 வீடுகள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 90 வீடுகள் திறப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். பிப்ரவரி 25 அன்று நடைபெறவுள்ள அரசு விழாவில் திறக்கப்படவிருந்த பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப் பட்டுள்ள 90 குடியிருப்புகளை, முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24 அன்று நேரில் சென்று முகாம்வாழ் தமிழர்களை திறந்து வைக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், முத லமைச்சர் முன்னிலையில் அக்குடி யிருப்புகள் முகாம் வாழ் தமிழர் களால் திறந்து வைக்கப்பட்டது. முத லமைச்சர், அவ்வீடுகளை பார்வை யிட்டு, முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதலமைச்சரிடம், முகாம் வாழ் தமிழர்கள் நாளை திறக்கப் படவிருந்த குடியிருப்புகளை, இன்றே திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சி யையும் அளிக்கிறது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் தரமானதாக உள்ளதாகவும், தங்களுக்கு முத லமைச்சர் வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவி கள் அனைவருக்கும் கிடைத்து வருவதாகவும் கூறி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், தங்களுக்கு நியாய விலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதலமைச்சர், அக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கு தல், நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் 15.2.2026 அன்று கடிதம் எழுதியதற்கும், தங்கள் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவரு வதற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றி யினைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சட்டமன்றப் பேர வைத் தலைவர் மு.அப்பாவு,தமிழக பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியா குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
