பாஜக ஆளும் குஜராத்தில் ரூ.10.92 கோடி போதைப்பொருள் பயிர்கள் பறிமுதல்
வன்முறை, கடத்தல், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என அனைத்துச் சம்பவங்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகம் நிகழ்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வரும் மாநிலமுமான குஜ ராத்தில் ரூ.10.92 கோடி மதிப்பிலான போ தைப்பொருள் பயிர்களை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர். சிஹோர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாகா வதர் கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் போதைப் பொருள் செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முட்டைக்கோஸ் மற்றும் ஆமணக்குப் பயிர்களுக்கு இடை யில் மறைத்து கஞ்சா (19 கிலோ) மற்றும் அபின் (1,103 கிலோ) பயிரிடப்பட்டி ருப்பது காவல்துறையால் கண்டுபிடிக் கப்பட்டது. இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக சஞ்சய் சவுகான், போகா சவு கான் ஆகிய சகோதரர்களை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.
