எல்டிஎப் அல்லாமல் வேறு யார்!கேரள அரசியல் களத்தில் ஒரு வரலாற்றுச் சமர்
இந்திய அரசியலே உற்றுநோக்கும் ஒரு மாநிலமாக கேரளா இன்று மாறியிருக்கிறது. குறிப்பாக, இடது ஜனநாயக முன்னணி (LDF) தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் நிலையில், மூன்றாவது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைத்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வியூகம் வகுத்துச் செயல்பட்டு வருகிறது. கேரளத்தின் மூலை முடுக்கெங்கும் எல்டிஎப் அரசின் சாதனைகளை விளக்கி, அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியா டுடே ஊடகத்திற்கு முதல்வர் வழங்கிய இந்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கடுமையான விமர்சனங்கள், ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை, மற்றும் கேரளத்தின் வளர்ச்சித் திட்டங்கள் எனப் பல தளங்களில் எழும் கேள்விகளுக்குத் தனது பாணிக்கே உரிய நிதானத்துடனும் அதே சமயம் துணிச்சலுடனும் பதிலளித்துள்ளார். சந்திப்பு: பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர் தேசாய்
