tamilnadu

img

நாகப்பட்டினம் நகராட்சி 16 ஆவது வார்டு சேமிப்பு கிடங்கில் இருந்து

நாகப்பட்டினம் நகராட்சி 16 ஆவது வார்டு சேமிப்பு கிடங்கில் இருந்து, நம்பியார் நகர் செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மீன்பிடித் தொழில் வாகனங்களில் வந்து செல்லும் இடமாக இருப்பதால், புதிய சாலை அமைத்து தருமாறு நாகை நகராட்சி ஆணையரை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரக்குழு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வில் நகரக் குழு உறுப்பினர்கள் வி. சுந்தர், எம். ராமு, கிளைச் செயலாளர் எம். குருசாமி, நகரச் செயலாளர் க. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.