சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற பகுதியைச் சேர்த்த என்சிஇஆர்டி-யின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு (தடை) அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
உண்மையும், நீதியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று துணை நின்றுள்ளது. பாஜகவுக்கு இந்தச் செய்தி ஒரு தார்மீக மரண தண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் மிகுந்த அவமானத்தில் துடிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு, நாட்டின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுப்பதைத் தங்கள் தொழிலாகக் கொண்டு இருந்தவர்கள்தான் இந்த பாஜக சித்தாந்தவாதிகள்.
தெலுங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா
பொய் என்றைக்கும் நீண்ட காலம் நிலைக்காது. அதனால் தான் இன்று உண்மை வென்றுள்ளது. தில்லி மதுபானக் கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை, பொய்களின் வலையை உடைத்துவிட்டது.
மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
அக்டோபர் 2023இல் ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொருவரின் வலியையும் துயரத்தையும் இந்தியா பகிர்ந்து கொள்வதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கூறினார். ஆனால், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,000-க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.
