states

img

“சவுத் குரூப்” என்று பிரிவினைப்படுத்துவதா? : சமூகவலைத்தளங்களில் வறுபடும் சிபிஐ

“சவுத் குரூப்” என்று பிரிவினைப்படுத்துவதா? : சமூகவலைத்தளங்களில் வறுபடும் சிபிஐ

தில்லி மதுபான கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தென் இந்தியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களை “சவுத் குரூப் (South Group)” என்று  குறிப்பிட்டதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தில்லி ரோஸ் அவென்யு  நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜித்தேந்திர சிங்  அளித்த தீர்ப்பில், “குற்றம்சாட்டப்பட்டவர்களில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாகப் பிரித்து “சவுத் குரூப்” (South Group) என்று ஒரு முத்திரையிட்டு அழைப்பது, ஒரு பாரபட்சமான பிம்பத்தை உருவாக்குகிறது. எந்தவொரு சட்டப்பூர்வமான ஆவணத்திலும் அல்லது ஆதாரத்திலும் இத்தகைய “குழு” இருந்ததற்கான சான்றுகள் இல்லாதபோது, சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் ஒரு கற்பனையான கதையை  உருவாக்க இச்சொல்லைப் பயன்படுத்தியதை ஏற்க முடி யாது. இந்திய நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி யைச் சேர்ந்தவர்களை மட்டும் ஒரு குற்றச் செய லோடு இணைத்து “குழு” என்று அழைப்பது தேவையற்றது மற்றும் அது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்” என நீதிபதி சிபிஐ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.  ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை எதுவும் குறிப்பிடாமல், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை மட்டும் “சவுத் குரூப்” என்று குறிப்பிட்டதை தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் மூலம் சிபிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்