சிபிஎம் - சிபிஐ தலைவர்களுடன் திமுக முதற்கட்டப் பேச்சுவார்த்தை!
சென்னை, பிப். 27 - திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இடையே, சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வெள்ளிக் கிழமை (பிப்.27) தொடங்கி யது. திமுக முதன்மைச் செய லாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலா ளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோ ரைக் கொண்ட குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் தலைமை யில் செயற்குழு உறுப்பினர் கள் க. கனகராஜ், கே. சாமு வேல்ராஜ், எஸ். கண்ணன் ஆகியோர் கொண்ட குழு, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், செய்தி யாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது, “2026 சட்டமன்றத் தேர்தலை, திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் தொகுதி உடன்பாடு கண்டு எதிர்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். அதனடிப்படையில், திமுக பேச்சுவார்த்தைக் குழு வோடு, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்றது. அடுத்த சில நாட்களில் மீண்டும் பேசு வது என்று தீர்மானித்திருக் கிறோம்” என்று தெரிவித் தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கூடுதல் தொகுதி களில் போட்டியிட வேண்டு மென்று எங்கள் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித் துள்ளது. அதனடிப்படையில் எங்களது கோரிக்கையை, திமுக குழுவிடம் தெரிவித் துள்ளோம். அவர்கள் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர். முதலில் தொகுதி எண்ணிக்கையை தீர்மானிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு விரும்பும் தொகுதி களின் பட்டியலை வழங்கு வோம். தொகுதியை குறைக்க வேண்டுமென்று கோரிக்கை எதையும் திமுக பேச்சுவார்த்தைக்குழு எங்க ளிடம் தெரிவிக்கவில்லை” என்றார். மேலும், “அனைத்து தோழமைக் கட்சிகளுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைப் பார்கள். அது விரைவில் நடைபெறும். மாநிலங் களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு சிபிஎம் ஆதரவளிக்கும்” என்றார். ஓ. பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்திருப் பது குறித்த கேள்விக்கு, “பாஜக - அதிமுக கூட்டணி யை முறியடிக்கக்கூடிய வகையில் யார் இந்த அணிக்கு வலுசேர்த்தாலும் அது நல்லது. ஓ. பன்னீர் செல்வத்தின் வருகையை அப்படித்தான் பார்க்கி றோம்” என்று பெ. சண்முகம் பதிலளித்தார். சிபிஐ பேச்சுவார்த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் மு. வீரபாண்டியன் தலைமையில், தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பி னர் இரா. முத்தரசன், மூத்த தலைவர்கள் கே. சுப்பரா யன் எம்.பி., ஜி. பழனி சாமி ஆகியோர் கொண்ட குழு திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின் செய்தி யாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “பேச்சு வார்த்தை மிக சுமுக மாக, மகிழ்வாக நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து பேச இருக்கிறோம். எண்ணிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர் கிறது. தொகுதியை குறைத்துக் கொள்ள எந்த முன்மொழிவையும் எங்களி டம் தெரிவிக்கவில்லை” என்றார்.
