ரூ. 300 கோடியில் பெரியார் நூலகம் : முதல்வர் ஆய்வு
கோயம்புத்தூர், பிப். 27 - தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளியன்று கோவை யில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில், தந்தை பெரியார் நூலகம், காந்தி தங்கியிருந்த இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டார். அனுப்பர்பாளையம் கிராமத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் ‘தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மைய’ கட்டு மானப் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். தரைத்தளம் மற்றும் 7 தளங்களைக் கொண்ட இந்த மையத்தில், விண்வெளிப் பயணத் தூக்கி, மெய்நிகர் தோற்றம், குழந்தை களுக்கான தனிப்பிரிவு மற்றும் 1.25 லட்சம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இந்நிலையில், மையப் பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். உடல் உறுப்பு தானம் செய்த சிறுமிக்கு அஞ்சலி தொடர்ந்து, ஆர்.எஸ். புரம் பகுதிக்குச் சென்ற முதல்வர், மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 7 வயது சிறுமி வெண்பாவின் இல்லத்திற்குச் சென்றார். சிறுமியின் பெற்றோரான திமுக மாமன்ற உறுப்பி னர் சந்தோஷ் - சுகன்யா ஆகியோ ருக்கு ஆறுதல் கூறி, 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த தியாகத்தைப் போற்றி நன்றி தெரிவித்தார். தமிழக அரசின் அரசாணைப்படி, உறுப்பு தானம் செய்தவர்களுக்கு வழங்கப் படும் அரசு மரியாதையை முதல்வர் இதன்போது நினைவு கூர்ந்தார். மகாத்மா காந்தி இல்லம் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இல்லத்திற்கு முதல்வர் சென்றார். கடந்த 1934-ஆம் ஆண்டு காந்தியடிகள் தங்கியிருந்த இந்த வர லாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய புகைப் படங்கள் மற்றும் ஆவணங்களை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளின் போது அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என். கயல்விழி செல் வராஜ், செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மேயர் ரங்கநாயகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
