tamilnadu

img

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்!

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்!

சென்னை, பிப். 27 - அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,  முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், திமுக-வில் இணைந்தார்.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை,  வெள்ளிக்கிழமை (பிப். 27) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேரில்  சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், தமது ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் (உசிலம்பட்டி), மகன் ஓ.பி.  ரவீந்திரநாத் மற்றும் ஏராளமான ஆதர வாளர்களுடன் திமுக-வில் இணைந்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அண்ணா தொடங்கி கலைஞர் கட்டிக்காத்த திமுக-வில் மனமகிழ்ச்சி யுடன் இணைந்துள்ளதாகக் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடைபெற்றதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தான் கட்சியில் ஒரு தொண்ட னாகவே இணைவதாகவும் கழகத்தின் வளர்ச்சிக் காக பாடுபடுவேன் என்றும் உறுதியளித்தார். எம்எல்ஏ பதவி ராஜினாமா  பின்னர், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் அய்யப்பன் ஆகிய இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரும் ஏற்கெனவே திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.