states

img

மோடியும், அமித் ஷாவும் தீட்டிய சதியே மதுபானக் கொள்கை வழக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விளாசல்

மோடியும், அமித் ஷாவும் தீட்டிய சதியே மதுபானக் கொள்கை வழக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விளாசல்

புதுதில்லி தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டி ருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழனன்று விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பு அறிவித்தப் பின்பு நீதிமன்றத் திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”நான் ஊழல்வாதி அல்ல. என் வாழ்நாள் முழு வதும் நான் நேர்மையை மட்டுமே சம்பாதி த்திருக்கிறேன். இன்று நீதிமன்றமே நாங்கள் (அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ்  சிசோடியா) உண்மையான நேர்மை யாளர்கள் என்று கூறிவிட்டது. இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி ஆகும். ஆம்  ஆத்மி கட்சியை அழிக்க பிரதமர் மோடி யும், அமித் ஷாவும் இணைந்து தீட்டிய திட்டம் இது. நான் சிறைக்கு சென்றதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் ஆகும்.  இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பதவியில் இருந்த ஒரு முதலமைச்சர் அவரது வீட்டிலி ருந்து இழுத்துச் செல்லப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கக் பட்டது. நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். தொலைக்காட்சி சேனல்களில் விவாதங் கள் நடந்தன, கெஜ்ரிவால் ஊழல்வாதி என்று செய்திகள் காட்டப்பட்டன. ஆனால் இன்று எல்லாம் பொய் என நிரூபிக்கப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.  சுனிதா கெஜ்ரிவால் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உண்மை எப்போதும் வெல்லும். எவ்வளவு சக்தி வாய்ந்தவர் களாக இருந்தாலும், கடவுளின் சக்திக்கு மேல் யாரும் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு  சமூக வலைதளப் பக்கத்தில்,”அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி கட்சியினர் ஆகியோருக்கு எங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் கருவிகளாக மோடி அரசு பயன்படுத்துவது மீண்டும் ஒருமுறை முழுமையாக அம்பலமாகியுள்ளது: பல ஆண்டுகளாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், நீண்ட கால சிறைவாசம் மற்றும் மோசமான அவதூறு பரப்புரைகளுக்குப் பிறகு, மதுபான “ஊழல்” என்று சொல்லப்பட்ட வழக்கில் இருந்து கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவை நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்க எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையைத் தவிர, இதில் எந்தவொரு சதியோ அல்லது குற்ற நோக்கமோ இல்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.