india

img

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் இன்று பதவியேற்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்.2 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இவ்விடங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவின் திருச்சி சிவா, ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் பாமகவின் அன்புமணி ஆகிய 6 பேரும் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்டனர்.