headlines

img

நிக்கோபார் மெகா திட்டம்:  ஒரு கார்ப்பரேட் வேட்டை

நிக்கோபார் மெகா திட்டம்:  ஒரு கார்ப்பரேட் வேட்டை

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுமார் 92,000 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மோடி அரசு முன்னெடுத்துள்ள “கிரேட் நிக்கோபார் தீவு” (GNI) மெகா உள்கட்டமைப்புத் திட்டம், அந்த மண்ணின் பூர்வகுடி மக்களின் வாழ்வா தாரத்தையும், தனித்துவமான சூழலியலை யும் நசுக்கும் ஒரு பேரழிவுத் திட்டமாக உருவெடுத்துள்ளது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியின மக்களை அவர்களின் மூதாதையர் நிலங்களிலிருந்து அந்நியப் படுத்தும் இந்த நடவடிக்கை, மோடி அரசின் கார்ப்பரேட் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக நிக்கோபார் பழங்குடியின மக்களை இடமாற்றம் செய்வது தொடர்பான வரைவு அறிக்கை, அம்மக்க ளிடையே கடும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2004 சுனாமிக்குப் பிறகு முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள், தங்களின் பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப அனுமதி வரும் நிலையில், அரசு அவர்களை மீண்டும் வேறு இடங்களுக்கு மாற்ற முற்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. பழங்குடியினரின் வன உரிமைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் ஒப்புதல் இன்றி இத்திட்டத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறிப்பாக, பழங்குடியினருக்கு வழங்கப் பட்ட வரைவு அறிக்கை தெளிவற்ற நிலை யில் இருப்பதும், அவர்கள் கோரிய மொழி பெயர்ப்பு வழங்கப்படாமல் அவசரகதியில் கையெழுத்து வாங்க மாவட்ட நிர்வாகம் முயல்வதும் சதிச் செயலாகும். “மக்களை இடம்பெயரச் செய்ய மாட்டோம்” என்று நீதிமன்றத்தில் ஒரு முகத்தைக் காட்டும் மோடி அரசு, களத்தில் மக்களை வெளியேற்று வதற்கான வரைவு அறிக்கைகளைத் தயார் செய்வது அதன் இரட்டை வேடத்தைத் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதும், அரிய வகை ஆமைகள் மற்றும் உயிரினங்களின் புகலி டங்கள் அழிக்கப்படுவதும் ஈடுகட்ட முடியாத இயற்கை இழப்பாகும். ‘சுற்றுச்சூழல் அனுமதி’ என்பது வெறும் காகித அளவிலேயே வழங்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை விட, கார்ப்பரேட் நிறுவ னங்களின் லாபமே மோடி அரசுக்கு முக்கியமாகத் தெரிகிறது. பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்விடங்களை அழித்து உருவாக்கப்படும் எந்த ஒரு வளர்ச்சியும் உண்மையான வளர்ச்சி ஆகாது. பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமையை அடகு வைத்து, இயற்கை வளங்களைச் சூறையாடும் மோடி அரசின் இந்த அதிகார மிரட்டலுக்கு எதிராகக் குரல் எழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.