எரிபொருள் விலை உயர்வு: மக்கள் மீது போர்!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலைச் சாக்குப்போக்காகக் காட்டி, இந்தியா வில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு மற்றும் விமான எரிபொருள் (ATF) விலையை மோடி அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. சர்வதே சக் காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலும் மோடி அரசின் இந்த நடவடிக்கை, ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நிலைகுலைந்துள்ள சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ஒரே நாளில் 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப் பட்டுள்ளது. தில்லியில் 195 ரூபாயும், சென்னை யில் 203 ரூபாயும் உயர்ந்துள்ள இந்த விலை உயர்வு, உணவகங்கள் மற்றும் சிறு தொழில் நிறு வனங்களை நிலைகுலையச் செய்யும். இதன் நேரடி விளைவாக உணவுகளின் விலை உயரும், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்கள் இழப்பைச் சந்திப்பதாக அரசு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. மே மாத இறுதிக்குள் 40,484 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணக்குக் காட்டும் அரசு, கடந்த காலங்க ளில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் கலால் வரியை உயர்த்திப் பதுக்கிக் கொண்டதை மறைக்கிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் முடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, 44 சதவீத விலை உயர்வை நியாயப்படுத்தும் மோடி அரசு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் படுதோல்வி அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிகளுக்கு துணை போகும் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையால், இன்று இந்திய மக்கள் எரிபொருள் விலையேற்றம் எனும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று அரசு கூறுவது தேர்த லை மனதில் கொண்ட ஒரு தற்காலிக நாடகமே தவிர வேறல்ல. விமான எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டுப் பயணக் கட்டணங்கள் உயருவது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பது அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தும். மக்கள் நலனைப் புறக்க ணித்து, போரையும் சர்வதேசச் சூழலையும் காரணம் காட்டித் தனது நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்கும் மோடி அரசின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் அதன் பலனை மக்களுக்குக் கடத்தாமல், வரிக் கொள்ளை மூலம் தனது கஜானாவை நிரப்பிக்கொண்ட மோடி அரசு, இப்போது விலையேற்றம் வந்தவுடன் கைவிரிப்பது அப்பட்டமான மக்கள் விரோதச் செயலாகும்.
