india

img

தேர்தல் ஆணையத்தின் நடுநிலையாக இருக்க வேண்டும்! - நீதிபதி பி.வி.நாகரத்னா

தேர்தலை நடத்தும் பொறுப்புள்ள ஆணையம், போட்டி இடுவோரை சார்ந்து இருந்தால், அதன் செயல் முறையில் நடுநிலையை உறுதி செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் உள்ள சாணக்கிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவுச் சொற்பொழிவை ஆற்றிய நீதிபதி நாகரத்னா, தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் மற்றும் நிதி ஆணையம் போன்ற நிறுவனங்கள் தேர்தல் சார்ந்த தாக்கங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தேர்தலை நடத்தும் பொறுப்புள்ள ஆணையம், போட்டி இடுவோரை சார்ந்து இருந்தால், அதன் செயல் முறையில் நடுநிலையை உறுதி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.