india

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6% ஆக குறையும் - மூடிஸ் நிறுவனம்

2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.8% இல் இருந்து 6%ஆக குறைத்துள்ளது மூடிஸ் நிறுவனம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 55 சதவீதத்திற்கும், அதன் LPG தேவைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை மத்திய கிழக்கு நாடுகள் பூர்த்தி செய்கின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  குறையும் மற்றும் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும் என்று மூடிஸ் எச்சரித்துள்ளது. 
2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.8% இல் இருந்து 6%ஆக குறைத்துள்ளது. அதேபோல், 2025-26 நிதியாண்டில் 2.4% ஆக இருந்த பணவீக்கம், 2026-27 நிதியாண்டில் 4.8% ஆக உயரும் எனவும் கணித்துள்ளது.