சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி
சென்னை, பிப். 27 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசி ப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற விருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக் கான தயார்நிலையை ஆழமாக மதிப்பா ய்வு செய்யும் நோக்கில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சென்னை வந்தனர். இவர்கள், முதல் நாளான வியாழக்கிழமை (பிப். 26), சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நிர்வாகிகளு டன் ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை யன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அனைத்து காரணிகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, இதுகுறித்த முடிவு எடுக்கப் படும். தேர்தல் அட்டவணை அறிவிக்கப் பட்டவுடன், தேர்தல் எத்தனை கட்டங் களாக நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிய வரும். ‘தொழில்நுட்பம் மூலம் வெளிப்படைத்தன்மை’ இத்தேர்தலில் வெளிப்படைத்தன்மை யை உறுதிசெய்ய தொழில்நுட்பம் பரந்த அளவில் பயன்படுத்தப்படவுள்ளது. 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் 100 சதவிகிதம் ‘வெப் காஸ்டிங்’ எனப்படும் நேரலை இணையக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சிசிடிவி கேமிரா க்கள் பொருத்தப்பட்டு முழுமையான வீடியோ பதிவும் செய்யப்படும். வாக்காளர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளரை இனங்காணுவதற்கு எளிதாக இருக்கும் வகையில், இம்முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயருடன் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும். ‘அஞ்சல் வாக்குகள் கடைசியாக எண்ணப்படும்’ ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் ‘ECINET’ செயலியில் பதிவேற்றப்படும். வாக்குப்பதிவு முடிந்த 72 மணி நேரத்திற்குள் அனைத்துத் தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். வேட்பாளர்கள் வாக்குப்பதிவு எண்ணி க்கையில் ஏதேனும் முரண்பாடு இருப்ப தாக ஆட்சேபம் தெரிவித்தால் உடன டியாக விவிபேட் ரசீதுகள் எண்ணப்படும். தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சிகளில் முக்கியமானது என்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின் கடைசி 2 சுற்று மீதமிருக்கும் போதுதான், அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாறு ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
