கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த வேட்பாளர் சுரேந்தர் மற்றும் மாற்று வேட்பாளருமான அவரது மனைவி சுதா ஆகியோர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனக் கூறி அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல், தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் டாக்டர் என்.பாரி தாக்கல் செய்த மனுவில் எழுத்துப் பிழைகள் இருந்ததாலும், விவரங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாததாலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான உத்தரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சீ.கிஷன்குமார் பிறப்பித்துள்ளார்.
