‘மதுபான கொள்கை வழக்கு ஜோடிக்கப்பட்டது’ கெஜ்ரிவால் விடுதலை
சிபிஐ மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
புதுதில்லி, பிப். 27 - மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து, தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளருமான கெஜ்ரிவால் உட்பட 23 பேரை விடுதலை செய்து தில்லி ரோஸ் அவென்யு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “கெஜ்ரிவால் எந்தவொரு உறுதி யான ஆதாரமும் இன்றி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஜித்தேந்திர சிங், “முறை யற்ற விசாரணையை அரங்கேற்றிய சிபிஐ விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண் டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்காகவும், அவர்களைப் பழிவாங்குவதற்காகவும் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புக்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியலை ஒன்றிய பாஜக அரசு இப்போது வரை செய்து வருகிறது. அவ்வாறு ஒன்றிய பாஜக அரசால் பழிவாங்கப்பட்டவர்களில் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ஒருவர் ஆவார். 2021-22ஆம் ஆண்டு தில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு கள் நடந்ததாக கூறி, தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மூலமே 2022-இல் ஒரு புகாரைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய பாஜக அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் தனித்தனியாக வழக்கு களைப் பதிவு செய்தது. ஆனால், முறைகேட்டுக்கு ஆதார மாக ஆளுநர் வி.கே. சக்சேனா எந்த அறிக்கையையும் காவல்துறையிடம் அளிக்கவில்லை என அப்போதே கூறப்பட்டது. கெஜ்ரிவால் - 23 பேர் எனினும், அப்போதைய தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் தெலுங்கானா எம்எல்சி கே. கவிதா (முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள்) உள்ளிட்ட 23 பேருக்கு சிபிஐ-யும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பின. 2023-இல் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதும் செய்யப் பட்டார். அவர் 530 நாட்கள் சிறை யில் துன்புறுத்தப்பட்டார். 2024-இல் கே.கவிதா, விஜய் நாயர், சஞ்சய் சிங் உள்ளிட்டோரும், முதலமைச்ச ராக இருக்கும் போதே அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்ட னர். கெஜ்ரிவால் பல்வேறு கட்டங் களாக 156 நாட்கள் சிறையில் அடைக் கப்பட்டார். சிபிஐ-யும் தனியாக கைது நடவடிக்கை மேற்கொண்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2024 செப்டம்பர் 13 அன்று கெஜ்ரி வாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு முத லமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜி னாமா செய்தார். அமைச்சராக இருந்த அதிஷி முதலமைச்சராக பொறுப் பேற்றார். ஆம் ஆத்மி தோல்வி இதற்கிடையே, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லி சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கையே முக்கியப் பிரச்சனையாக கிளப்பி பாஜக பிரச்சாரம் செய்தது. வாக்கு எண்ணி க்கை முடிவில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48இல் வெற்றி பெற்று, ஆட்சியையும் பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வென்றாலும் முதலமைச்சரான கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டார். சிபிஐ-க்கு குட்டு இந்நிலையில் தான், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு, தில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ மற்றும் குற்றச்சாட்டப்பட்ட வர்கள் என இருதரப்பு வாதங் களுக்குப் பிறகு தில்லிரோஸ் அவென்யு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜித்தேந்திர சிங் அளித்த தீர்ப்பில்
“கெஜ்ரிவால் எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அடிப்படை ஆதா ரங்கள் இல்லாத நிலையில், சதியில் அவ ருக்குப் பங்கு இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இது சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது. அதே போல சிசோடியாவுக்கு எதிராக முதல்நிலை ஆதாரம் எதையும் சமர்ப்பிக்க சிபிஐ தவறிவிட்டது. மதுபான கொள்கை உருவாக்கத்தில் அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரமோ அல்லது அவரிடமிருந்து எந்தவொரு பண மீட்போ செய்யப்படவில்லை. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தவறான மற்றும் திசைத்திருப்பும் தகவல்கள் உள்ளன. மதுபான கொள்கை வழக்கில் ஆயிரக்கணக் கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையில் சாட்சிகளோ அல்லது வாக்கு மூலங்களோ இல்லாத பல ஓட்டைகள் உள்ளன. அரசுத் தரப்பின் வாதங்கள் தங்களுக்கு உள்ளேயே முரண்படுகின்றன. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட குல்தீப் சிங்குக்கு (அரசு ஊழியர்) எதிராக எந்த ஆதாரமும் இல்லாத போது, அவர் ஏன் இதில் சேர்க்கப்பட்டார்? என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே, முறையற்ற விசாரணையை நடத்திய சிபிஐ விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட கெஜ்ரிவால், மணீஷ் சிசோ டியா, கவிதா உட்பட 23 பேரையும் இந்த நீதி மன்றம் விடுதலை செய்கிறது. இந்த வழக்கு நீதித்துறை ஆய்வுக்கே தகுதியற்றது” என வும் உத்தரவிட்டார். இதன்மூலம் எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் போலி வழ க்கை பதிவு செய்து, சிபிஐ மற்றும் அமலா க்கத்துறை மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் மோடி அரசின் எதேச்சதிகாரம் மீண்டும் அம்பலமாகியுள்ளது. சிபிஐ மேல்முறையீடு : இதன்பிறகும் திருந்தாத மோடி அரசு, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி யான சில மணி நேரங்களிலேயே, தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
