world

img

பொலிவியாவில் விமான விபத்து - 15 பேர் உயிரிழப்பு!

பொலிவியாவில் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்ற ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலௌ 6.15 மணுக்கு (உள்ளூர் நேரப்படி) சாண்டா க்ரஸ் நகரிலிருந்து எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த C-130 ஹெர்குலீஸ் விமானம் தரையிறங்கும் போது ரன்வேயை விட்டு வழுவி அருகிலிருந்த வாகனங்களை மோதியது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
.பின்னர் பொலிவியன் விமானப்படை, விபத்தில் சிக்கியது தங்களது விமானம் என உறுதிப்படுத்தியது. இந்த விமானம்  வங்கிக் காசோலைகளை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்புத்துறை தெரிவித்தது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.