இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மயிலாடுதுறை - 7.29 லட்சம், பெரம்பலூர் - 5.55 லட்சம் பேர்
மயிலாடுதுறை, பிப்.24- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவ ட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் வெளியி டப்பட்டு பொதுமக்கள், வாக்காளர்கள் பார்வைக்காக வைக்க ப்பட்டுள்ளது. மேலும் 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை http://voters.eci.gov.in, www.elections.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் தெரிந்து கொள்ளலாம். தற்போது வெளியிட ப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்கா ளர்கள் 1,18,809 நபர்களும், பெண் வாக்காளர்கள் 1,20,647 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 13 நபர்களும் என மொத்தம் 2,39,469 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,14,613 நபர்களும், பெண் வாக்காளர்கள் 1,17,979 நபர்களும், மூன்றாம் பாலி னத்தவர்கள் 26 நபர்களும் என மொத்தம் 2,32,618 வாக்காளர்கள் உள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,27,071 நபர்களும், பெண் வாக்கா ளர்கள் 1,30,050 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 நபர்களும் என மொத்தம் 2,57,129 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாக்காளர் பட்டியலின்படி, மயி லாடுதுறை மாவட்டத்தில் 7,29,216 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 3,60,493 நபர்களும், பெண் வாக்காளர்கள் 3,68,676 நபர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 நபர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும், கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதற்குப் பிறகு 24,126 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 3,032 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் - 5.55 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந.மிருணாளினி திங்கட்கி ழமை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார். பின்னர் மாவட்ட அவர் கூறுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,65,121 ஆண் வாக்காளர்களும், 2,75,791 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். SIR-2026 இன் கோரிக்கை மற்றும் மறுப்புரை காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 5,033 ஆண் வாக்காளர்களும், 6,071 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,729 ஆண் வாக்காளர்களும், 4,532 பெண் வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 345 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,66,682 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,31,720 ஆண் வாக்காளர்களும், 1,34,959 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இறுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,71,634 ஆண் வாக்காளர்களும், 2,83,466 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5,55,131 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ப தால், வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விண்ணப் பங்கள் வழங்கிடலாம்’’ என்றார்.
