states

img

ஸ்கேன் இந்தியா

தொடர்கதை 

ஆரவல்லி மலைத் தொடரைத் தகர்க்கும் வேலை கள் நிற்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த தில் இருந்து ஆரவல்லி மலைத் தொடரின் பல பகுதிகளில் குவாரிகள், பெரும் கட்டடங்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி தரும் முயற்சிகள் தொ டங்கின. கடும் அதிருப்தியடைந்த பொதுமக்கள் போரா ட்டங்களை நடத்தினர். அவர்களோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இடதுசாரிகள், விவசாய சங்கத்தினர் கைகோர்த்தனர். நீதிமன்றங்களும் மக்கள் கருத்தை மதித்தன. தங்கள் நடவடிக்கைகளைத் திரும்பப் பெறு வதாக அரசுகள் சொன்னாலும், அவை நிற்கவில்லை.  ஹரியானாவில் கோவில் நிர்வாகம் ஒன்றிற்கு ஆழ்துளை கிணற்றைத் தோண்டுவதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். இது சட்டவிரோதம் என்று மக்கள் கிளர்ந்து எழுந்தனர். தடுத்தி நிறுத்திவிட்டா லும், இப்படிப் பல இடங்களில் அனுமதி தரவிருக்கி றார்கள் என்ற செய்தி மக்கள் மத்தியில் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நலன்களுக்கு எதிராக

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்த சாதி ரீதியான கருத்திற்கு எதி ராக மாணவர்கள் போராடி வருகிறார்கள். சாந்திஸ்ரீக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ்  - பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இருக்கி றது. போராடும் மாணவர்களுக்கு எதிராக நிர்வாகமும், காவல்துறையும் வரிந்து கட்டி நிற்கிறது. சாதி ரீதியான கருத்தைத் தெரிவித்த துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்காமல், மாண வர்கள் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுக ளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கி றார்கள். மாணவர் பேரவைத் தேர்தலில்  வெற்றி பெற்றதில் இருந்து இடதுசாரி அமைப்புகளை செயல்பட விடாமல் தடுக்கும் வேலைகளை நிர்வாகம் செய்து வருகிறது. மாணவர்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

சீர்கேட்டுக்கு ஆதரவு

குஜராத்தின் மகிசாகர் பகுதியில் வேதிப் பொருட்கள் கலந்த குடிநீரால் 29 கிரா மங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி யில் உள்ள மவுரியா என்விரோ திட்ட தனியார் நிறுவனம்தான் இந்த சீர்கேடுக்குக் காரணமா கும். நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறது. மக்களின் போராட்டங்களை ஆளும் பாஜக கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கேத்பிரம்மா துஷார், அந்தத் தண்ணீரை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்று சோதித்துப் பார்க்குமாறு சவால் விடுத்தார். அது நிச்சயமாக, வேதிப்பொருட்கள் கலந்ததாகத்தான் இருக்கும் என்று தெரிந்த சபா நாயகரோ, அதை உள்ளே எடுத்து வந்தது சட்டப்படி தவறு என்று ஆட்சியாளர்களுக்கு சாதகமாக நின்றார். 2024ஆம் ஆண்டே பல மாதிரிகளை எடுத்துச்சென்று குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதித்து விட்டாலும் தனியார் நிறுவனத்திற்குசாதகமாகவே அரசு நிற்கிறது.

வெறுப்பு விதை

“உன் பெயர் என்ன..? தள்ளிப் போ.. ஏய்.. அவங்க ளுக்கு கம்பளி குடுக்காதே..”. ராஜஸ்தா னில் உள்ள டோங்க் பகுதியில் கம்பளி விநியோ கம் செய்து கொண்டிருந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுக்பீர்சிங்தான் இப்படிக் கூறினார். வாங்க வந்தவர்களில் சிலர் இஸ்லாமியர் கள் என்று தெரிந்து தர வேண்டாம் என்று கூறி விட்டார். ஏற்கனவே கம்பளியை வாங்கியிருந்த ஒரு  இஸ்லாமியப் பெண்ணிடம் இருந்து அதை பிடுங்கி னர். இதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். தங்கள் கிராமத்தில் நான்கு அல்லது ஐந்து இஸ்லாமியக் குடும்பங்கள்தான் உள்ளதாகவும், எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் இல்லையென்றும் கூறியிருக்கிறார்கள்.  இப்படியொரு சம்பவம் இதுவரையில் நடந்ததில்லை. அமைதியாக இருக்கும் ஊரில் தேவையில்லாமல் பிளவை விதைத்து விட்டுச் செல்கிறார்கள் என்று குமுறியுள்ளனர்.