tamilnadu

சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு தெற்கு ரயில்வேயின் நிர்வாக அலட்சியமே காரணம்!

சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு  தெற்கு ரயில்வேயின் நிர்வாக அலட்சியமே காரணம்!

சென்னை, பிப். 25 “சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிரடியாக மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலமே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தெற்கு ரயில்வேயின் திட்டமிடப் படாத நிர்வாக அலட்சியமே முக்கியக் கார ணம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், ரயில்வே துறை நிலைக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், சென்னை புறநகர் ரயில்வே வரலாற்றில் இத்தகைய மோசமான  நீண்ட காலச் சேவைக் குறைப்பு இதற்கு  முன்பு நடந்ததே இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். அவரது அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு: புறக்கணிக்கப்பட்ட மும்பை மற்றும் கொல்கத்தா மாதிரிகள் ரூ. 2,450 கோடி மதிப்பில் மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் (CSMT) பிப்ர வரி 2026-இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டபோது, புறநகர் ரயில் பாதைகளைத் தனிமைப்படுத்திச் சேவை கள் பாதிக்கப்படாமல் அந்நிர்வாகம் உறுதி செய்தது. அதேபோல், கொல்கத்தா -    சீல்டா விரிவாக்கப் பணிகள் வார இறுதி நாட்களில் மட்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சென்னையில் ரூ. 734 கோடி மதிப்பிலான எழும்பூர் பணிக்காக 45 நாட்க ளுக்குத் தினசரி 2.5 லட்சம் பயணிகளைத் தவிக்கவிட்டுள்ளது தெற்கு ரயில்வே. மும்பை  போன்ற நகரங்களில் பின்பற்றப்படும் ‘தனி மைப்படுத்தப்பட்ட நடைமேடை’ உத்தியை எழும்பூரில் ஏன் செயல்படுத்தவில்லை? என சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். திட்டமிடல் தோல்வியும்  சேவைக் குறைப்பும் தினசரி இயக்கப்பட்டு வந்த 204 புறநகர் ரயில் சேவைகள் 115 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. இது 43 சதவீதச் சேவைக் குறைப்பா கும். 8 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்பது  மாறி, தற்போது 15 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களுக்கென ஒதுக்கப்பட்ட நடை மேடைகள் 10 மற்றும் 11-ஐ மூடிவிட்டு, அவற்றை எக்ஸ்பிரஸ் நடைமேடைகளான 5  மற்றும் 6-க்கு மாற்றியுள்ளனர். எக்ஸ்பிரஸ் நடைமேடைகளின் சமிக்ஞை அமைப்புகள் (Crossings) புறநகர் ரயில்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இதனால் ரயில்கள் நிலையத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் 55 கி.மீ-லிருந்து 15 கி.மீ ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த வேகக்குறைப்பு ரயில்களின் எண்ணிக்கையை நேரடியாகப் பாதிக்கிறது. எம்.ஆர்.டி.எஸ் இணைப்புப்  பணி தாமதம் வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுண்ட்  இடையிலான 5 கி.மீ எம்.ஆர்.டி.எஸ் (MRTS)  இணைப்புப் பணி கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. எழும்பூர் பணிகளைத்  தொடங்குவதற்கு முன்பாக, இந்த இணைப்பை முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக்  கொண்டு வந்திருந்தால், பயணிகள் எழும்பூர் வழியாக வரும் தேவையிருக்காது. ஆனால், எழும்பூர் பணிகள் உச்சத்தில் இருக்கும்போது, எம்.ஆர்.டி.எஸ் இணைப்பு  மார்ச் மாதம்தான் முடியும் என்று ரயில்வே தரப்பு ஒப்புக்கொள்வது பணிகளை ஒருங்கி ணைப்பதில் உள்ள பெரிய தோல்வியாகும். பொருளாதாரச் சுமையும்  கல்விப் பாதிப்பும் 10 ரூபாய் ரயில் பயணத்திற்குப் பதிலாக,  தற்போது மக்கள் ஆட்டோ மற்றும் தனியார்  டாக்ஸிகளில் 400 ரூபாய் வரை செலவிட  வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இது தினசரி கூலி வேலை செய்ப வர்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிப்ரவரி மற்றும்  மார்ச் மாதங்களில் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், இத்த கைய சேவைக் குறைப்பு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் காரணியாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை (CUMTA) மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) ஆகிய வற்றுடன் முறையாகக் கலந்தாலோசிக்கா மல் எடுக்கப்பட்ட இந்தத் தன்னிச்சையான முடிவு, சென்னை மக்களின் அன்றாட வாழ்க் கையைப் பாதித்துள்ளது. இந்த நிர்வாகக் கோழைத்தனத்திற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று சு.  வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.