states

img

வன உரிமை, குறைந்தபட்ச ஊதியம் உயர்வுக்காக... விவசாயிகள், தொழிலாளர்கள் 150 கி.மீ.,நெடும் பயணம்

வன உரிமை, குறைந்தபட்ச ஊதியம் உயர்வுக்காக... விவசாயிகள், தொழிலாளர்கள் 150 கி.மீ.,நெடும் பயணம்

மும்பை வன உரிமைச் சட்ட அமல், குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தி  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் செங்கொடி உயர்த்தி அகில்யாநகர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணத்தை துவங்கியுள்ளனர்.   மகாராஷ்டிராவின் அகில்யாநகர் (முன்னாள் அகமதுநகர்) மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வாழ்கின்ற னர். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் நீண்ட நெடுங்காலமாக நில உரிமை, நியாயமான ஊதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என   வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் தலைமையில் பிப்.24 அன்று சுமார்  148 கி.மீ நீள நெடும் பயணத்தைத் துவங்கினர்.  இந்தப் பயணத்தில் விவசாயிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், ஆஷா சுகாதாரப் பணியாளர்கள், பகுதி நேர பெண் உதவியாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் என ஆயிரக்க ணக்கானோர்  பங்கேற்றுள்ளனர். இந்தப் போரா ட்டக்காரர்கள் அகில்யாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைய உள்ளனர். 2026 துவக்கத்தில் சரோட்டி - பால்கர் வரையிலும், நாசிக் முதல் கார்டி வரை யிலும் நடைபெற்ற நடைப்பயண போராட்டங்க ளைத் தொடர்ந்து இந்த நெடும் பயணம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முந்தைய நடைப்பயணங்களின் போது தொழிலாளர்கள் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் அம்மாநில பாஜக முதல்வர் மற்றும் அமைச்சர்க ளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில்  விவாதிக்கப்பட்டது. பாஜக அரசும் கோரிக்கை களை நிறைவேற்றுவதாக செங்கொடி சங்கங்க ளின் முன் பணிந்தது. எனினும் அகில்யாநகர் மாவட்டத்தில் அந்த வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. போராட்டக்காரர்களின்  பிரதான கோரிக்கைகள் l    2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை (FRA) அதிகாரிகள் தவறாகச் செயல் gடுத்துகிறார்கள். தலைமுறை தலைமுறை யாக நிலத்தைச் சாகுபடி செய்து வரும் பழங்குடியினரின் தனிநபர் மற்றும் சமூக வன உரிமைகளை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. l    மேலும் ஏழை விவசாயிகளிடம் ஆவணச் சான்றுகளைக் கேட்டு அலைக்கழிக்காமல், நேரடி ஆய்வு, முதியவர்களின் வாக்கு மூலங்கள் மற்றும் கிராம சபையின் கருத்துக ளின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும். l    பகுதி நேர பெண் உதவியாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியத்தை  ரூ. 26,000 ஆக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து மற்றும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். l    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அனைத்து நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு, ரூ. 5 லட்சம் வீடு கட்டும் மானியம் மற்றும் 60 வய துக்கு பின் ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். l    ஆஷா பணியாளர்களுக்கு ரூ. 26,000 முதல் ரூ. 35,000 வரை ஊதியம் வழங்க வேண்டும். பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.   l    அங்கன்வாடி பணியாளர்களை  உச்சநீதி மன்ற உத்தரவுப்படி அரசு ஊழியர் அந்தஸ்து க்கு மாற்ற வேண்டும்  மற்றும் ரூ. 30,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் பேரணியில் சிபிஎம் மகாராஷ்டிர மாநிலச் செயலாளர் அஜித் நவாளே சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட, மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.