states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த ஜோசப் குரியன் குழு அளித்திருக்கும் ஆய்வறிக்கை, கூட்டாட்சியை நிலைநிறுத்த அமைப்புப்பூர்வமான மாற்றம் கொண்டு வர கோரியிருக்கிறது. ஒன்றிய அரசு, மாநிலங்களை நம்ப வேண்டும். பன்முகத்தன்மை இறையாண்மையை பலவீனப்படுத்தாது, மாறாக ஜனநாயகத்தைதான் வலுப்படுத்தும்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர்கள் இடம்பெற்ற காரணத்தால் உலகநாடுகள் பலவற்றில் முக்கிய பொறுப்புகள் வகித்த பலர் ராஜிநாமா செய்திருக்கின்றனர். ஹர்தீப் பூரி இன்னும் ஒன்றிய அமைச்சராக நீடிக்கிறார். மோடி இஸ்ரேலுக்கு செல்கிறார். “இஸ்ரேலில் மோடி பாடி ஆடினார்” என எப்ஸ்டீன் அம்பானிக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா

கேரளா ஸ்டோரி 2 படத்தை உருவாக்கிய தயாரிப்பாளரும் இயக்குநரும் ‘கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள்’ என 30 பெண்களை அறிமுகப்படுத்தினர். அவர்களில் ஒருவர் கூட கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் படத்தின் பெயரோ ‘கேரளா ஸ்டோரி’. இது படம் அல்ல, வெறுப்பு வியாபாரம்!

உச்சநீதிமன்ற நீதிபதி உத்தல் புயான் 

என் மகளின் தோழி நொய்டாவில் ஆய்வுப்படிப்பு படிக்கிறார். தங்குமிடம் தேடிக் கொண்டிருந்த அவர், தெற்கு தில்லியிலுள்ள பெண்கள் விடுதியை அணுகி இருக்கிறார்.அவர் இஸ்லாமியப் பெண் என தெரிந்து கொண்ட விடுதி பெண் உரிமையாளர், அவருக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை.