tamilnadu

img

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணி

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணிரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணி

சென்னை, பிப்.25 - ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி புதனன்று (பிப்.25) தலைமைச் செய லகம் நோக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணி  நடத்தினர். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சுமார் 7ஆயிரம் கோடி ரூபாய் பணம் உள்ளது. இந்த பணத்திலிருந்து தொழிலாளர்களுக்கு மாதம் 1200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியத் தொகையை 2ஆயிரம் ரூபாயாக உயர்த்த நலவாரி யக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டும் அரசு அமல் படுத்தாமல் உள்ளது. இந்நிலையில், ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர் களுக்கு 55 வயதிலிருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி மரண மடைந்தாலும் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி தர வேண்டும். தீபா வளி போனசாக 5ஆயிரம் ரூபாயும், பொங்கல் தொகுப் புடன் 5ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். விபத்து  நிதியாக 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத்  தொழிலாளர்கள் அண்ணா சாலை, பெரியார் சிலை  அருகிலிருந்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக  ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம்  (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத் திற்கு, சம்மேளன தலைவர் கே.பி.பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய துணைத்  தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி.சுகு மாறன், பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், பொரு ளாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலா ளர் வி.குமார், நிர்வாகிகள் மாலதி சிட்டிபாபு, ஆர்.சிங்காரவேலு, ஏ.கிருஷ்ணமூர்த்தி, சம்மேளன பொதுச் செயலாளர் டி.குமார், பொருளாளர் ஜெ.லூர்துரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் தலைமைச் செயலகத்தில், தொழி லாளர் துறைச் செயலாளர் வீர ராகவ ராவிடம் தலை வர்கள் மனு அளித்தனர்.