tamilnadu

img

வகை வகையாக வடை சுடும் இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

வகை வகையாக வடை சுடும் இபிஎஸ்!  முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

நாகர்கோவில், பிப்.25- தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தாழ்த்தி வீழ்த்த பாஜக முயல்கிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பேசிய அவர், வளர்ச்சி அடைகின்ற மாநி லங்களில் பாஜக இருக்காது;  பாஜக இருந்தால் வளர்ச்சி இருக்காது. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், மணிப்பூர் தொடர்ந்து எரிவது, அசாம் முதல்வரின் வெறுப்பு அரசி யல் உட்பட பல்வேறு மாநி லங்களில் பாஜக ஆட்சியின்  தோல்விகளை அவர் எடுத்து ரைத்தார். இத்தகைய நிலை மையை தமிழ்நாட்டிலும் கட்டமைக்க பாஜக முயல் கிறது. ஆனால் நமது திமுக  ஆட்சியில் மத நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த முதல்வர்,  வக்ஃப் திருத்தச் சட்டம் மற்றும் சிஏஏவுக்கு எதிராக  சட்டப்பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார். வர லாற்றில் இல்லாத எண்ணிக் கையாக 4 ஆயிரம் கோவில் களுக்கு குடமுழுக்கு செய் துள்ளோம் என்றும் கூறி னார். அதிமுக தலைவர் எடப் பாடி பழனிசாமியை விமர் சித்து பேசிய முதல்வர், ஒருவர் நாட்டு மக்கள் அனை வருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக வடை சுட்டது போல, பழனிசாமியும் இப்போது வகை வகையாக வடை சுடுகிறார். இந்த வடைகளை மக்கள் நம்பத் தயாரில்லை.  பாஜக டப்பா என்ஜினை நம்பி அதிமுக இருக்கிறது; அதிமுக என்கிற மூழ்குகிற கப்பலை நம்பி பாஜக இருக் கிறது; பூஜ்ஜியமும் பூஜ்ஜிய மும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான், ராஜ்ஜியம் கிடைக் காது” என்று முதலமைச்சர் கடுமையாக சாடினார்.