tamilnadu

img

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணம் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் - கைது

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணம் ஆட்டோ  ஓட்டுநர்கள்  போராட்டம் - கைது

சென்னை, பிப். 24 - மீட்டர் கட்டணத்தை திருத்தி அமைக்க கோரி போராட்டம் நடத்திய ஆட்டோ ஒட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 13 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மாற்றி அமைக்காமல் உள்ளது. மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி 2022ஆம் அண்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் 4 ஆண்டுகளாக கட்டணத்தை திருத்தி அமைக்காமல் உள்ளது. இந்நிலையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசு ஆட்டோ செயலியை விரைந்து தொடங்க வேண்டும், சட்ட விரோதமாக இயக்கப்படும் டூவீலர் பைக் டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும், தகுதிச்சான்று (எப்சி) கட்ட ணம் மற்றும் ஆன்லைன் அப ராதம் உள்ளிட்ட  புதிய மோட்டார் வாகன சட்டம்-2019 அம்சங்களை அமல் படுத்தக் கூடாது, நலவாரிய நிதியை பயன்படுத்தி ஓட்டுநர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும், அரசு மருத்துவமனை களில் ஆட்டோக்களுக்கு நிறுத்தம் அமைக்க அனு மதிக்க வேண்டும், புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப். 24) சாலைப் போக்கு வரத்து ஆணையர் அலுவல கம் முன்பு சென்னை மாவட்ட சிஐடியு சங்கங்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை சிஐடியு மாநிலச் செய லாளர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர்கள் ஜி.செந்தில்குமார் (தென்சென்னை), எஸ்.கே. முருகேஷ் (மத்திய சென்னை), ஆட்டோ சங்கத் தலைவர்கள் ஜெ.முகமது அனீபா, இ.உமாபதி (தென் சென்னை), ஆர்.கபாலி (மத்தியசென்னை), செல்வராஜ், ஜெயகோபால், குமரன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் கிரண்குராலா, சங்கத் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு தொழிலாளர்களிடம் பேசிய எஸ்.பாலசுப்பிரமணியம் “பைக் டாக்சியை உடனடி யாக தடை விதிக்க முடியாது. மாறாக, அபராதம் விதிக்கப் படும். தகுதிச் சான்றிதழ் பெற ஆன்லைன் அபராதங்களை கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற உத்தர விலிருந்து ஆட்டோக் களுக்கு விலக்கு அளிக்கப் படும். மீட்டர் கட்டணம் மாற்றி அமைப்பது தொடர்பாக நேரில் முதலமைச்சரை சந்தித்து ஆலோசித்து நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அறி விப்பு வெளியாகும் வரை திட்டமிட்டபடி 26ந் தேதி வரை தினசரி காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்றார். இதனையடுத்து காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.