ஆர். நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை ராஜீவ்கந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்
சென்னை,பிப்,24- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்து கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வய தாகும் அவர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு மற்றும் உணவு விழுங்க மு டியாத நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான சிகிச்சை களை மருத்துவர்கள் அளித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் அதிதீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று (பிப்.24) நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நல்ல கண்ணுவுக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட் டுள்ளது. இப்போது, அவரது உடல் நிலையை பல்வேறு சிகிச்சைகள் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
