states

நவகேரளா கணக்கெடுப்பு தொடரலாம் உச்சநீதிமன்றம் அனுமதி

நவகேரளா கணக்கெடுப்பு தொடரலாம் உச்சநீதிமன்றம் அனுமதி

நவகேரளா கணக்கெடுப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள் ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்  மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு, உச்சநீதிமன்ற நீதிபதி கள்,“அரசு கணக்கெடுப்பை நடத்துவ தில் எந்தத் தவறும் இல்லை. கோடிக்க ணக்கில் செலவழித்து திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இது குறித்து மக்களின் கருத்தைக் கேட்பதில் என்ன தவறு? என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து,“சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக கூறப் பட்டுள்ள புகாரில் எந்த அடிப்படையும் இல்லை” என்றும் நீதிமன்றம் தெளிவு படுத்தியது. கேரள அரசு தரப்பில் மூத்த  வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.