தோழர் ஏ.எஸ். ராமு 19 ஆவது நினைவு தினம்
மன்னார்குடி, பிப்.24- மன்னார்குடி ஒன்றிய முன்னாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான ஏ.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் ஏ.எஸ். ராமுவின் 19 ஆவது நினைவு தினம் மன்னார்குடியில் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னதாக, அவரது சொந்த ஊரான தலையாமங்கலத்தில், அவரது வீட்டின் முன்பு, கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் டி. முருகையன் ஏற்றி வைத்து, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினரும் ஏ.எஸ். ராமுவின் மருமகளுமான புஷ்பா சிவசேகரன், புதல்வர் சிவசேகரன், வி.சா. ஒன்றியச் செயலாளர் காசிநாதன், தலைவர் எஸ்.பி பொன்னுசாமி, கிளைச் செயலாளர் ஜி. தங்கராசு, சிஐடியு தலைவர்கள் ஜி. ரெகுபதி, டீ. ஜெகதீசன், கே. பிச்சைக்கண்ணு, அ.ப. தனுஷ்கோடி, கே. ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
