tamilnadu

img

சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்

சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்

நாகப்பட்டினம், பிப்.24  சிவப்பு புத்தக வாசிப்பு தினத்தை முன்னிட்டு, நாகை தெற்கு ஒன்றியத்தில்   “கூலி உழைப்பும் மூலதனமும்’’ என்ற தலைப்பில் வாசிப்பு முகாம் நடைபெற்றது.  பாப்பாகோவிலில் உள்ள நாகை தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, தெற்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை நகரம் ஆகிய ஒன்றியக் குழுக்கள் சார்பில், 20-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.  தரங்கம்பாடி ஒன்றியக் குழு அலுவலகமான திருக்கடையூர் ஏகேஜி பவனில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார்.  ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.