தரங்கம்பாடி, ஏப்.7-நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத் திற்கு ஆதரவாக திராவிடர் கழகம்சார்பில் மயிலாடுதுறை சின்னக் கடை வீதியில் நடைபெற்ற பிரச்சாரப்பொதுக்கூட்டத்திற்கு திராவிட கழகத்தின் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.அதிமுக- பிஜேபி அமைத்துள்ள மோசடிக் கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி கொள்கைகள் நிறைந்த கூட்டணி என்றும், சமூக நீதியை அழிக்கும் ஆர்.எஸ்.எஸின் கொள்கையை அமல்படுத்தும் வேலையை தான் பிஜேபி மோடிஅரசு செய்து வருகிறது. நோட்டாவோடு போட்டியிடும் பாஜக தமிழகத்தில் கணக்கை தொடங்குவதற் காக தான் போட்டியிடுகிறது வெற்றிப்பெற இல்லை. தமிழ்நாட்டின் கோட்டையில் உள்ள கொத்தடிமைகளை ஒழிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி முதல் திட்டகமிஷன் வரை அனைத்து துறைகளிலும் மோடியின் தாக்குதல் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள், துணை வேந்தர்கள் உள்ளிட்டவர் களும் மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவல நிலை உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என கூறியமோடி ஆட்சியில் 4.5 கோடி பேர்வேலையிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புக்கு15 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் ரூ.353 கோடி மட்டுமேமோடி அரசு வழங்கியுள்ளது. தமிழ் நாட்டை காப்போம், இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தலை சந்திக்கிறது என கி.வீரமணி பேசினார். தி.க மாவட்டச் செயலாளர் தளபதிராஜ், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், திராவிடர் கழக பொதுச் செயலாளார் மா.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், க.அன்பழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.