states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக்

கொரோனா கால இறப்பு எண்ணிக்கையை இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே மாற்றியுள்ளது. சிஆர்எஸ் தரவு 2021 ஆம் ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான  நபர்கள் இறந்துள்ளதை காட்டுகிறது.  இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கொரோனா கால மரணங்களை விட சுமார் 6 மடங்கு அதிகம். குஜராத்தில் அதிகபட்சமாக 33 மடங்கும், கேரளாவில் 1.6 மடங்குமாக மட்டுமே உள்ளது.

சிபிஐ(எம்) மாநிலங்களவை உறுப்பினர் ஜான்பிரிட்டாஸ்

கொரோனா கால மரணங்களை மிகவும் குறைத்து கணக்கிட்டிருப்பதை கடைசியாக அரசாங்கத் தரவுகளே அம்பலப்படுத்தியுள்ளன. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக கிட்டத்தட்ட 20 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளியாக உள்ளது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

பிபிசி, ராய்ட்டர்ஸ், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ், ஏபி போன்ற ஊடகங்களின்  அறிக்கைகளின் அடிப்படையில் இருந்து முதல் நாள் இரவு  ஏற்பட்ட இழப்புகளின் உண்மையை மறுப்பதற்காக,  “இது சரியான நேரம் அல்ல” என சொல்லி மோடி அரசாங்கம் ஒளிந்து கொள்வது அர்த்தமற்றது. நேர்மையாக இருப்பதே இந்தியாவின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

 சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், அம்ராராம்    

பொறுப்புள்ள குடிமக்கள், சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.