வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58.50 குறைந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்று (ஜூலை 1, 2025) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டு ரூ.1,823.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தில்லியில் ரூ.1,665 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,769 ஆகவும், மும்பையில் ரூ.1616.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.