சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள கோகுலேஸ் ஃபயர் ஒர்கர்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலையின் போர்மேனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து, பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.