ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பாஜக அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறது. அதனால் தான் வெறுப்பை பரப்ப “எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பை ஷரியா திரைக்கதையாக மாற்ற முயற்சிப்பதாக” அவமதிப்பான சொற்களை பயன்படுத்துகிறது பாஜக. மீண்டும் சொல்கிறேன். பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், திருத்தப்பட்ட வக்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவோம்.
பிஆர்எஸ் மூத்த தலைவர் கே.கவிதா
தொழிற்சாலைகளில் அரசு சார்பாக வழக்கமான ஆய்வுகள் நடத்த வேண்டும். தெலுங்கானாவில் நடந்த மருந்து தொழிற்சாலை வெடி விபத்துக்கு அலட்சியம் காரணமாக இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான இழப்பீடும் வழங்க வேண்டும்.
கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே
எங்களுக்கு ஒரு உயர்ந்த கட்டளை அமைப்பு உள்ளது. மூத்த தலைவர்கள் அனைவரும் கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் தேவையில்லை என தெளிவாகக் கூறியுள்ளனர். அதனால் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு அது முக்கியமில்லை.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
இன்று வரை மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரை முற்றாக கைவிட்டுவிட்டார். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும் அவர் மறந்து விட்டார். என்னதான் செய்கிறார் அந்த ‘சாணக்கியர்’?