states

img

ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் வினோத் சிபிஎம்மில் இணைந்தார்

ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் வினோத் சிபிஎம்மில் இணைந்தார்

கூட்டுறவு ஊழியர் காங்கிரஸ் (ஐஎன்டியுசி) மாநிலச் செய லாளராகவும், ரெய்ட்கோ சந்தைப்படுத்தல் மேலாளராகவும் இருந்த கூத்துபரம்பைச் சேர்ந்த வினோத் பூஞ்சக்கரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்துள்ளார். ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட மத தேசியவாதிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக செய்தியாளர் சந்திப்பின்போது வினோத் தெரிவித்தார். மக்களின் வளர்ச்சிக்கான கனவுகளை நனவாக்கிய எல்டிஎப் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் என்று வினோத் பூஞ்சக்கரா சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரி வித்தார்.