தெலுங்கானா வெடி விபத்து : பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தின் பஷ்யல்ராம் பகுதி யில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் திங்க ளன்று காலை மருந்து தயா ரிப்பிற்கான ரசாயன கலவை இயந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர். திங்களன்று இரவு நிலவரப்படி 12 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், படுகாய மடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மடக் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை அன்று மாலை நிலவ ரப்படி மருத்துவமனையில் சிகிச சை பெற்று வந்த, மேலும் 30 தொ ழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளதால் பலி எண்ணிக் கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதாவது பலி எண்ணிக்கை 50-ஐ தாண்ட லாம் என செய்திகள் வெளியாகி யுள்ளன. 35 பேர் பலியா? ரசாயன வெடிவிபத்தில் 42 பேர் பலியாகியதாக செவ்வாய்க் கிழமை அன்று மதியம் செய்தி கள் வெளியாகியது. ஆனால் 35 பேர் மட்டுமே பலியாகியுள்ள தாக மற்றொரு தகவல் ஒன்று பரவி வருகிறது. எனினும் 42 தான் அதிகாரப்பூர்வ பலி எண் ணிக்கை என மருத்துவ அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ள தாக கூறப்படுகிறது. ரூ. 1 கோடி இழப்பீடு? ரசாயன விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை சிகாச்சி இண்ட ஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தி ற்கு சொந்தமானது ஆகும். இத்த கைய சூழலில் வெடிவிபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும் பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதற்காக சிகாச்சி இண் டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாகத்து டன் தனது அரசாங்கம் ஈடுபடும் என தெலுங்கானா முதலமைச் சர் ரேவந்த் ரெட்டி செய்தியா ளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.