இமாச்சலில் 10 நாளில் 35 பேர் பலி; 20 பேரைக் காணவில்லை மீண்டும் மேகவெடிப்பு ; 216.8 மி.மீ., கனமழை
மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல்
மேகவெடிப்பு என்பது குறுகிய காலத் தில் மிகப்பெரிய மழைப்பொழிவு நிகழ்வதாகும். இந்தியாவில் இமய மலைச்சாரல் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் மேகவெடிப்பு அடிக்கடி நிகழும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அதீத அளவில் கனமழையை எதிர்கொள்ளும் பகுதியான இமயமலைச்சார லில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் கடந்த வாரம் மேகவெ டிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. 34 பேர் பலி இந்த மேகவெடிப்பு கனமழை காரணமாக பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தரம்சாலா நீர் மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இது வரை 17 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். காணாமல் போன 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவ தாகவும், எனினும் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகி யுள்ளன. இதே போல மாநிலம் முழுவதும் கடந்த 10 நாட்களில் பெய்த பலத்த மழையில் சிக்கி 34 பேர் வரை உயிரிழந்ததாக மாநில வரு வாய், பழங்குடியினர் மேம்பாடு மற்றும் தோட்டக்கலை அமைச்சர் ஜகத் சிங் நேகி கூssறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கனமழை தொடர்பான சம்பவங்க ளால் மாநிலம் முழுவதும் 129 சாலைகள் மூடப் பட்டுள்ளன. அதிகபட்சமாக சிர்மௌரில் 57 சாலைகளும், மண்டியில் 44 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதே போல மாநிலம் முழு வதும் 60% இடங்களில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார். மீண்டும் மேகவெடிப்பு... இந்த அதீத கனமழை சேதத்துக்கு இடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் திங்களன்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மாவட்டத் தின் மையப்பகுதியில் மேகவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. இதனால் சையாஞ்சு, கர்சோக் பகுதிகள் கடுமையாக உருக்குலைந்துவிட்டன. குறிப்பாக சையாஞ்சு பகுதியில் மேக வெடிப்பில் சிக்கி 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளனர். கர்சோக் பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார். அதே போல மண்டி மாவட்டம் முழுவதும் 13 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இதில் சையாஞ்சு பகுதியில் மேக வெடிப்பு மழையில் சிக்கிய 7 பேர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என செய்திகள் வெளியாகியுள்ளன. இயல்புநிலையை இழந்த மாண்டி குறுகிய காலத்தில் 216.8 மி.மீ., கன மழையை எதிர்கொண்டதால் மாண்டி மாவட்டம் இயல்புநிலையை இழந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு ஏற்படுவது சகஜமானது தான். ஆனால் குறுகிய காலத்தில், அதாவது 10 நாட்கள் இடைவெளியில் மேகவெடிப்பு சம்ப வங்கள் நிகழ்வது நல்லதல்ல. இதனால் இமாச்ச லப்பிரதேச மாநிலத்தின் இமயமலைப் பகுதிச் சாரலில் வாழும் மக்கள் பதற்றத்தில் இருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன.