நீதிமன்ற உத்தரவின்படி ஊதியம் வழங்கு
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அவுட் சோர்சிங், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தைக் கணக்கிட்டு வழங்க வலியுறுத்தி திங்களன்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கங்கத்தினர் (சிஐடியு) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.