ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கோரிக்கை
செங்கல்பட்டு,ஜூன் 30- உயர்நீதிமன்ற உத்தர வின்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாவட்ட பேரவை மாவட்ட தலை வர் பி. மாசிலாமணி தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலை வர் என்.அன்பு வரவேற்றார். பேரவை துவக்கி வைத்து சம்மேளன பொருளாளர் இ.உமாபதி பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.பகத்சிங்தாஸ், மாவட்டத் தலைவர் என்.பால்ராஜ், மாவட்ட பொரு ளாளரின் கலைச்செல்வி, மோட்டார் வாகன சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநில தலைவர் எம்.சிவாஜி பேசி னார். ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.ரமேஷ் நன்றி கூறினார். இருசக்கர ரேபிட்டோ பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோவிற்கு விதி விலக்கு வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு பெற்ற ஆட்டோ தொழி லாளர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் 10 விழுக்காடு வீடு வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்க ளுக்கு 4 லட்சம் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியான புதிய ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய பென்சன் தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சங்கத்தின் மாவட்ட தலைவராக பி.மாசிலாமணி, செயலாளராக எம்.ரமேஷ், பொருளாளராக என்.அன்பு உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து துவங்கிய ஊர்வலம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் பி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் க. பகத்சிங் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சம்மேலனத்தின் மாநில தலைவர் எம்.சிவாஜி பேசினார்.