tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கொரோன காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

உதகை, ஜூன் 30 – நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா வில் உள்ள கரிமொரஹட்டி கிராமத் திற்கு கொரோனா காலத்தில் நிறுத்தப் பட்ட அரசுப் பேருந்து சேவையை மீண் டும் தொடங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.  அம்மனுவில் கூறப்பட்டுள்ளதா வது, “கரிமொரஹட்டி கிராமத்திற்கு 2020-2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அரசுப் பேருந்து, இதுவரை மீண்டும் இயக் கப்படவில்லை. இதனால் கரிமொர ஹட்டி, கரோலினா, பெரியார் நகர்,  சந்திரா காலனி மற்றும் சுற்றியுள்ள  கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாமல் குன்னூர் செல்வதற்கு பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி  செல்லும் குழந்தைகள், மருத்துவ மனைக்குச் செல்வோர், மற்றும் தின சரி வேலைக்குச் செல்வோர் ஒரு முறைக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை  ஆட்டோவிற்குச் செலவழிக்க வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், நடந்து  செல்லவும் முடியாத நிலை உள்ளது. கரிமொரஹட்டி கிராமத்திற்கு ஏற் கனவே இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த முறை அரசுப் பேருந்து  இயக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட் டால், போராட்டம் நடத்தப்படும்” என்று  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளை மாநாடு

தருமபுரி, ஜூன் 30– தருமபுரி மாவட்டம், பாப் பாரப்பட்டி பேரூராட்சி 8- ஆவது வார்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கிளை  மாநாடு பாரதிதாசன் தெரு வில் நடைபெற்றது. ப.கார்த் திக் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் மு. சிலம்பரசன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் ம.அருள் குமார் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். இம்மாநாட்டில், கிளைச் செயலாளராக ப. கார்த்திக் தலைவராக ம. சந்தோஷ் உள்ளிட்ட புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

போக்சோ வழக்கில் கைதான  ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

தருமபுரி ஜூன்-30,  சிறுமி பாலியல் வழக்கில் கைதான ஆசிரி யருக்கு தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ  நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து  நீதிபதி தீர்பளித்தார்.  தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம்  தங்கவேல் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் குமார். இவர் வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரிய ராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19.11.2019 ஆம் தேதி  அதே பள்ளியில் படித்து வந்த 10-வயது சிறுமி யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள் ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச் சியடைந்த சிறுமியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்ட பிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கு தொடர்பாக தருமபுரி மகிளா விரைவு நீதிமன்றத்தில் சரணடைந் தார். மேலும் காவல்துறை இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரி மீது மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற் றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ் வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட சிறப்பு  போக்சோ நீதிமன்ற நீதிபதி  மோனிகா, திங்க ளன்று, பிரகாஷ் குமாரை குற்றவாளியாக அறிவித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/-அபராதமும் விதித்து தீர்ப் பளித்தார்.

காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம்

நாமக்கல், ஜூன் 30 – வேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண் டாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுருத்தி உள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே வேலூர் காவிரி ஆற்றில்  பொதுமக்கள் குளிக்க வேண்டாம் பேரூராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து, வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், எப் போது வேண்டுமானாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகப்படியான தண்ணீர் வெளி யேற்றப்படும் போது வேலூர் காவிரி ஆற்றின் இரு கரை களையும் தொட்டபடி செல்லும். அப்போது தண்ணீரின் வேகம்  அதிகமாகவும் இருக்கும். எனவே பொது மக்களின் நலன் கருதி வேலூர் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகள் துவைக் கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். மேலும் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப் பான இடத்திற்கு செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.