tamilnadu

img

குடிநீர் வழங்குவதில் குளறுபடியை கண்டித்து நூதனப் போராட்டம்

குடிநீர் வழங்குவதில் குளறுபடியை கண்டித்து நூதனப் போராட்டம்

நாமக்கல், ஜூன் 30 – குடிநீர் வழங்கு வதில் குளறுபடி ஏற் பட்டிருப்பதாக குற் றம்சாட்டி, பள்ளிபாளையம் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட் சியில் 21 வார்டுகள் உள் ளன. இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக 17.70 கோடி ரூபாய் மதிப்பில் அம்ருத் திட்டம் கடந்த 2023 ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை இத்திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. பல வார்டுகளிலும் இத்திட்டத்தில் போடப்பட்ட தரமற்ற குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் செல்வதால் வீடுகளுக்கு தண்ணீர் முறையாக வருவதில்லை .  இது குறித்து பள்ளிபாளையம் நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்ரூத் திட்டத்தில் முறைகேடுகள் அதிகளவு நடந்து இருப்பதாகவும் இதனால் மக்களுக்கு பயனளிக்காத இந்த திட்டத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் நூதன போராட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில்  திங்களன்று நடைபெற்றது. அப்போது உடலில் நாமம் பூசியபடி “கோவிந்தா கோவிந்தா” கோஷத்துடன், மோட்டார்களுக்கு பொதுமக்கள் பால் அபிஷேகம் செய்து பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.