தெலுங்கானாவில் வெடி விபத்து 12 தொழிலாளர்கள் பலி
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தின் பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக் கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் திங்களன்று காலை மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை இயந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி தொழிற்சா லையில் வேலை செய்து வந்த 10 தொழி லாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். படுகாயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். திங்களன்று மாலை நில வரப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண் ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 20 தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்க ளில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என மடக் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 100 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்ட உடல்கள் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக நிகழ்ந் துள்ளது. தொழிலாளர்கள் சிலர் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டுள் ளனர். உடனடியாக தீப்பிழம்புகள் தொ ழிற்சாலையின் சில பகுதிகளை சூழ்ந்தன. ஆலை முழுவதும் கரும்புகை வெளி யேறியது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த வர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர்.