states

img

தில்லியில் 138 விமானங்க ளின்

தில்லியில் 138 விமானங்க ளின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.  போர்ப் பதற்றங்கள் அதி கரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட  இந்திய துறைமுகங்களுக்கு இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் 2 ஆம் கட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. பொதுமக்க ளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவசர கால சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்  உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை அதிகரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு ஒன்றிய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இதற்காக “பிராந்திய ராணுவ விதி 1948 இன் விதி 33 ஆல்  வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு ராணுவத் தளபதிக்கு ஒன்றிய அரசு அதிகாரம் கொடுத்துள்ளது.  உத்தராகண்டில் பயணிகளுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்கு உள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர். அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது .