தெலுங்கானாவில் சிபிஐ மாநில கவுன்சில் உறுப்பினர் சுட்டுக்கொலை
தெலுங்கானா மாநிலம் ஹை தராபாத் மாலக்பேட்டில் உள்ளது சாலிவாஹன நகர் பூங்கா. இந்த பூங்காவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் சந்து நாயக் (எ) சந்து ரத் தோட், செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண் டார். அப்போது பூங்காவில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று சந்து ரத்தோட்டை வழி மறித்து அவரது கண்களில் மிளகு தூள் வீசி, துப்பாக்கியால் சுட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சந்து ரத்தோட் சரிந்தார். அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சந்து ரத்தோட் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் அரசியல் வன்முறை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டி யுள்ளது.