திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்
கர்நாடக அரசின் அறிவிப்பு 1,198 நாட்களாக போராடிய தேவனஹள்ளி விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதற்காக சில விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். சமரசமற்ற போராட்டத்தின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இந்த சம்பவம் மனிதாபிமானமற்றது ; வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம்.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடந்தால், முதலமைச்சர் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமென குரல்கள் எழும்பும். தொலைக்காட்சிகளில் கடுமையான விவாதங்கள் நடக்கும். ஆனால் பாஜக ஆளும் ஒடிசாவில் பாலியல் வன்முறையால் மரணமே நேர்ந்தால் கூட “குற்றத்தை அரசியல் ஆக்காதீர்கள்” என சொல்கிறார்கள்.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
2020ஆம் ஆண்டிலிருந்து விமான இஞ்சின் செயலிழந்த சம்பவங்கள் 65 நேர்ந்திருக்கின்றன. ஆனால் அகமதாபாத் விமான விபத்துக்கு விமான ஓட்டிதான் காரணமென சொல்லி நம்மை நம்பச் சொல்கிறார்கள்.